மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு!!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (01) முதல் தளர்த்தப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீக்கப்பட மாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிறப்பக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று (30) அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.