;
Athirady Tamil News

இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!!!

0

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் நடப்பு ஆண்டு (2021) மார்ச் மாத இறுதி நிலவரப்படி 57 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது இந்திய நாட்டு மதிப்பின்படி சுமார் ரூ.43 லட்சம் கோடி ஆகும்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக்கடன் கொரோனா நெருக்கடியின்போது 2.1 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டுக்கடன் நடப்பாண்டு மார்ச் மாதம் 21.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் இந்த கடனுக்கான ஒதுக்கீடு விகிதம் 85.6 சதவீதத்தில் இருந்து 101.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டுக்கடனில் டாலர் சார்ந்த கடனே அதிக அளவில் உள்ளது. மொத்தக் கடனில் இதன் பங்களிப்பு 52.1 சதவீதம் ஆகும்.

இதை தொடர்ந்து இந்திய ரூபாய் (33.3 சதவீதம்), யென் (5.8 சதவீதம்), எஸ்.டி.ஆர்.(4.4 சதவீதம்), யூரோ (3.5 சதவீதம்) ஆகியவை உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*