ராஜஸ்தானில் 4 மருத்துவ கல்லூரிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தவுசா ஆகிய 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அதோடு ஜெய்ப்பூரில் உள்ள சீதாபுராவில் ரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த காணொலியின்போது மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய சுருக்கமான வீடியோ விளக்கமும் காட்டப்பட்டது.