;
Athirady Tamil News

குழந்தைகள் தடுப்பூசி… சில அடிப்படை உண்மைகள்!! (மருத்துவம்)

0

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி அனைவரும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தங்களும் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி பற்றி சில அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்வோம்…

* வைரஸோ பாக்டீரியாவோ… எந்த கிருமி ஒரு நோயை உருவாக்குகிறதோ, அதே கிருமியில் இருந்து தயாரிக்கப்படும் Antigen என்ற பொருள்தான் தடுப்பூசி. இது உடலில் ஊசி மூலமோ அல்லது வாய் மூலமோ செலுத்தப்பட்டு உடல் அந்த ஆன்டிஜெனுக்கு எதிர்த்து நிற்கும் விதமாக ஆன்டிபாடி ((Antibody)ஐ சம்பந்தப்பட்ட கிருமிக்கு எதிராக உருவாக்குகிறது. இந்த ஆன்டிபாடி ரத்தத்தில் இருந்துகொண்டு, பின்னர் அதே கிருமி உடலில் நுழையும்போது, அதனை அழித்து நோய் வராமல் தடுத்து விடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* குழந்தை பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோவுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப்படுகின்றன. பி.சி.ஜி. (BCG-Bacille Calmette Guerin) கையில் போடப்படும். ஆறு வாரங்களுக்குப் பிறகு டி.பி.டி. (DPT) எனப்படும் முத்தடுப்பு ஊசி, போலியோ தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து இரண்டாவது டோஸ், ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ், ரோட்டா வைரஸ், பி.சி.வி. முதல் டோஸ், எச்.ஐ.பி. முதல் டோஸ் அளிக்கப்படும்.

* தடுப்பூசி நேரங்களிலும் மற்றும் ஒன்றரை வயதிலும் போலியோ இன்ஜக்‌ஷன் (IPV) ஊசி மூலம் எடுத்துக் கொண்டால் நல்லது. இதுவரையிலும் போலியோ மருந்து வாய்வழியாக மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. ஊசி மூலம் இந்த மருந்து செலுத்துப்படுவதால் நூறு சதவிகிதம் போலியோவைத் தடுக்கலாம்.

* பொதுவாக தடுப்பூசி போட்ட அரை மணி நேரத்தில் அதன் எதிர்விளைவு (அலர்ஜி) தெரிந்துவிடும். உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். உயிர் ஆபத்து இல்லையெனினும் தாமதிப்பது கூடாது.

* சாதாரணமாக, தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. இந்த சமயங்களில் காய்ச்சல் மாதிரியான சில உபத்திரவங்கள் தலைகாட்டலாம். அப்போது மருத்துவர் தரும் மருந்துகளை மட்டும் பயன்படுத்தினாலே போதும்.

* குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து போட வேண்டாம். கடுமையான காய்ச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.