தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்!!

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தமிழ் அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வைத்து அரசியல் பிரமுகர்களை வெளிவிவகாரச் செயலாளர் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய அரசியல் பிரமுகர்களும், அரசியல் ஆய்வாளர்களான கே.ரி. கணேசலிங்கம், நிலாந்தன், யாழ்ப்பாண வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம், உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”