;
Athirady Tamil News

உ.பி. துணை முதல்வர், மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம்: கார் மோதியதில் 2 விவசாயிகள் பலி..!!!

0

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை விவசாயிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.