;
Athirady Tamil News

பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டவர் குத்திக்கொலை..!!

0

மும்பை வடலாவை சேர்ந்தவர் முகமது அன்சாரி(வயது41). இவர் கடந்த 1-ந்தேதி இரவு அப்பகுதியில் உள்ள பொது இருக்கையில் அமர்ந்து தனது நண்பருடன் செல்போனில் சாட்டிங் செய்து இருந்தார். அப்போது, அங்கு வந்த முகமது சேக்(24) என்ற வாலிபர் அவர் அருகே நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்.

இதனை கண்ட முகமது அன்சாரி சிறிது இடைவெளியை விட்டு செல்லும்படி தெரிவித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரம் அடைந்த முகமது சேக் தான் வைத்திருந்த கத்தியால் முகமது அன்சாரியை சராமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த முகமது அன்சாரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது சேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.