;
Athirady Tamil News

அர்த்தமுள்ள அதிகாரப் பரவலை அடையவும் இந்தியா தொடர்ச்சியான ஆதரவளிக்கவேண்டும்!! (படங்கள்)

0

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் கீழான 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தவும், அர்த்தமுள்ள அதிகாரப் பரவலை அடையவும் இந்தியா தொடர்ச்சியான ஆதரவளிக்கவேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்தவும் இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் வழங்கவேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்றிரவு சந்தித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.