;
Athirady Tamil News

வடக்கில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் – டேவிட் நவரட்ணராஜ்!! (வீடியோ)

0

வடக்கில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் அரசின் நிதி பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே டேவிட் நவரட்ணராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் வடக்கில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் நேரடியாக முன்னெடுக்கப்பப்படுகின்றன எனவே இந்த திட்டங்களை யாரும் உரிமை கோர முடியாது. இந்த அரசினால் நேரடியாக மக்களுக்காக திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாளை கூட நீர்ப்பாசன அமைச்சின் கீழ் ஒரு குடிநீர் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

அவ்வாறு பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் இந்த அரசாங்கத்தின் நிதியீட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

சுமார் 4 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் மக்களுக்கான குடிநீர் திட்டமானது நாளையதினம் பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அதேபோல் வீதி, குளம் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தில் பல கட்சிகள் அங்கம் வகித்தாலும் நேரடியாக நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 4 =

*