;
Athirady Tamil News

வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தின் மஹோற்சவத்தின் கொடியேற்றம்!! (படங்கள்)

0

வரலாற்று சிறப்பு வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தின் மஹோற்சவத்தின் கொடியேற்றம் இன்று பக்தி முறையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது..
கருவரையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள்,சீதேவி,பூமாதேவி ஆகிய தெய்வங்களுக்கான விசேட அபிசேங்கள் ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டவத்தில் அருள் பாலிக்கும் எம் பெருமான் சமேதரக்கு விசேட திருத்திகை ஆராதனைகள் இடம்பெற்றன..

எம் பெருமான் சமேதராக சக தெய்வங்கள் சூரிய பரிதிசேவை ஊடாக வீற்று உள்வீதியுடாக கொடியேற்றத்திற்கு வந்தடைந்தனர். பின்பு 08.30 மணியளவில் பிரதம சிவாச்சாரியர்களில் மந்திர ஓத மேளதாளவாத்தியம் முழங்க எம் பெருமானின் மஹோற்சவ கொடியேற்றத்தினை பிரதமசிவாச்சாரியர்களினால் எற்றிவைக்கப்பட்டது..
இவ் மஹோற்சவம் எதிர்வரும் 17.10 உள்வீதியுடான சிறியதேர் ரதோற்சவமும்,மறுநாள் உள்வீதி தீர்த்த உற்சவம் இனிதே மாலை கொடியிரக்கத்துடன் இனிதே மஹோற்சவ கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும்.
இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ செ.ரமணீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.

இவ் மஹோற்சவத்திற்காக நாட்டில் எற்பட்டுள்ள கொரோனாத்தொற்று நிலைமைகாரணமாக ஆலய நிர்வாகத்தினர்,மற்றும் உபயகாரர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என ஆலய நிர்வாகத்தின் தெரிவிக்கின்றன….
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*