கொழும்பில் உள்ள சீன தூதரகம் அவசர அறிக்கை !!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உர மாதிரிகளில் ஆபத்தை விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருந்தமை தொடர்பான சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பான உண்மைகள் மற்றும் ஒப்பந்தத்தின் சிக்கலை உடனடியாக தீர்ப்பதற்கு, சீன நிறுவனம் மற்றும் இலங்கை அதிகாரிகள் இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சீன-இலங்கை ஒத்துழைப்பில் பரஸ்பர உரையாடலின் மூலம் இதில் காணப்படும் வேறுபாடுகளை நிவர்த்தி செய்யுங்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.