;
Athirady Tamil News

உர பிரச்சனையை தீர்க்கும் திட்டமொன்றை தொடங்கியுள்ளோம் – ஜோன்ஸ்டன் !! (படங்கள்)

0

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின்படி, மனைப் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தி குடும்ப அலகுகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ் நீரியல் வள தொழில்முயற்சி திட்டங்களை செயல்படுத்தும் குருநாகல் மாவட்ட நிகழ்வு ஆளும் தரப்பு பிரதம கொறடா , நெடுஞ்சாலை அமைச்சர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் 09-10-2021 ஆம் திகதி குருணாகல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தத நிகழ்வின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நனைந்தவாறு விவசாயிகளிடம் சென்றது குறித்து அரசாங்கத்தின் கருத்து என்ன என்று ஊடகவியலாளர்
ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
எதிர்க்கட்சித் தலைவருக்கு நோயொன்று தொற்றியிருக்கிறது. காலையில் மாத்திரை எடுக்காத நாளில் அவர் வயலில் இறங்குவார்.
பாராளுமன்றத்தில் எழுந்து நிற்பார். அதனால் அது ஒன்றும் புதிதல்ல. இந்த நாட்டில் மக்கள் இறப்பதை பார்க்க ஆசைப்படும் ஒரு எதிர்க்கட்சித்தலைவர் தான் அவர், குடையை இறங்கி வைத்து விட்டு நனைகிறார். மக்களுக்காகத் தான் நனைவதாக காண்பிக்க இவ்வாறு செய்கிறார்கள்.

அவற்றை வெறும் திரைப்படக் காட்சிகளாகத்தான் பார்க்கிறோம். விவசாயிகள் உரப் பிரச்சினை குறித்து எந்த அவநம்பிக்கையும் கொள்ளத் தேவையில்லை. உர பிரச்சனையை தீர்க்கும் திட்டமொன்றை தொடங்கியுள்ளோம். மேலும்,விவசாயிகளுக்கு பயிற்செய்கையின் போது நஷ்டம்
ஏற்பட்டால் விவசாயிகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும். எதிர்க்கட்சியினர் நாட்டில் மாறுபட்ட கருத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
எனவே, நாடு குறித்து சிந்தித்து சரியான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். எனவே, எங்கள் விவசாயிகளுடன் இணைந்து இந்த பிரச்சினையை
நிச்சயம் வெற்றி கொள்வோம் என்றார்.

பால்மா தட்டுப்பாடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
இவை அனைத்தும் தற்காலிக பிரச்சினைகள். பால் மா ஒரு தற்காலிக பிரச்சனை மட்டுமே. சீமெந்து ஒரு தற்காலிக பிரச்சனை. எரிவாயு ஒரு தற்காலிக பிரச்சனை. இந்த கோவிட் நெருக்கடியிலிருந்து நாம் சாகாமல் தப்பித்தால் அதுவே போதும். எங்கள் டொலர் கைஇருப்பு குறைந்து வருவதை நாங்கள் அறிவோம். பிரச்சினைகள் வந்தன. ஆனால் இந்த அரசாங்கம் மக்களை இறக்க இடமளிக்கவில்லை. இவை அனைத்தும்
தற்காலிக பிரச்சினைகள். விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் பால் மா கிடைக்கும். எரிவாயு வந்துவிடும் . இந்த பிரச்சினைகள்
கோவிட் ஏற்படுத்திய தற்காலிக பிரச்சனைகள் மட்டுமே என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நான்கு ஐந்து துண்டுகளாக பிரிந்துள்ளதாக டயனா கமகே எம்.பி குற்றஞ்சாட்டுவது குறித்து குறித்தது ஊடகவியலாளர்
எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் திறமையின்மை மற்றும் அவரது முதிர்ச்சியற்ற தன்மையையும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் கண்டோம்.எதிர்க்கட்சித் தலைவரின் திறமையின்மையால் எதிர்க்கட்சி துண்டுகளாக உடைவது புதிய விடயமல்ல. அவரினால் தான் இப்போது எதிர்க்கட்சி
பிளவுபட்டுள்ளது. இது முற்றிலும் வெடிக்கும். அதனால்தான் அவர் மழையில் நனைவது போன்று நாடகமாடினார். சஜித் பிரேமதாச
விவசாயிகளுக்காக அன்றி எதிர்க்கட்சித் தலைமையை காப்பாற்றவே முயற்சிக்கிறார். அவர் இரண்டு தேர்தல்களிலும் தோல்வியடைந்த
எதிர்க்கட்சித் தலைவர் என்றார்.

மாகாண சபைத் தேர்தல் நெருங்குகிறதா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
நாட்டில் தேர்தல் நடத்தப்படவேண்டும். தேர்தல் நடைபெறுகிறதென்றால் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுகிறது என்று பொருள். தேர்தல்
நடைபெறும் போது, இவர்களின் வெட்டிப் பேச்செல்லாம் நின்றுவிடும். கோவிட் நிலைமையில் பாராளுமன்றத்தை திறக்குமாறு கோரினார்கள்.
நீதிமன்றத்திற்கு சென்றார்கள். ஒரு மீட்டர் தூரத்தை பேணி தேர்தல் நடத்தினால் மூன்று நாட்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என்று
கூறினார்கள் . இறுதியில், நாட்டின் மக்கள் எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுத்தனர். எனவே தான் தேர்தலை நடத்த
வேண்டும் என்று நாங்களும் கூறுகிறோம் என்றார் .

கடந்த வாரம் தொகுதிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டது. முதலமைச்சர் பதவிக்கு சில செயலாளர்கள் போட்டியிட தயாராகி வருவதாக
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவது தேர்தலுக்காக அல்ல. கிராம மக்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும் கிராம மக்களின்
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலை நோக்காக வைத்தே அவ்வாறு செய்ததாக யாராவது நினைத்தால்,
அது அப்பட்டமான பொய். நாங்கள் எப்பொழுதும் தேர்தலுக்குத் தயாராக உள்ள அரசு. புதிதாக நிதி ஒதுக்குவதற்கு எமக்குத் தேவை இல்லை.

அன்றிருந்த பொருளாதார நிலையல்ல இன்றிருப்பது. அன்றிருந்த தேசிய பாதுகாப்பு அல்ல இன்றிருப்பது. தேசிய பாதுகாப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி நாட்டை ஒரு வலிமையான அரசாக வழிநடத்தி வருகிறார். எனவே, வங்குரோத்து அரசியல்வாதிகள்,
வங்குரோத்து அரசியல் கட்சிகள், பொதுச் சொத்தை திருடிய அரசியல் கட்சிகள், மத்திய வங்கியை திருடிய அரசியல் கட்சிகளை இந்த நாட்டு
மக்கள் மறக்கவில்லை. இந்த கொடிய தொற்றுநோயை நாம் எப்போது முழுமையாக வென்று இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக
மாற்றும் வரை இந்த நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சியை எங்களால் கொண்டு வர முடியும் என்று நாங்கள்
நம்புகிறோம் என்றார்.

எமது நாட்டு மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த
அமைச்சர் ,எதுவும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இவர்கள் முதலீட்டாளர்கள். மின்சார கட்டணம் குறைந்தால், தெற்காசியாவில் அதிக
மின் கட்டணம் இலங்கையில் அறிவிடப்படுகையில் அது குறைந்தால் அது எவ்வளவு நல்ல விடயம். இந்த விலை குறைப்பு தான்
மின்நிலையங்களை அமெரிக்காவிற்கு கொடுப்பதாக காட்ட முயல்கின்றனர். அவர்கள் பட்டம் தயாரிக்கிறார்கள். ஜனாதிபதி மிகவும் சரியான முடிவை எடுத்துள்ளார்.

கோவிட் நெருக்கடி இருந்தபோதிலும் இந்த நாட்டில் முதலீட்டாளர்களின் வருவது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
முதலீட்டாளர்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என்று எதிர்க்கட்சி கூறுகிறது. ஆனால் இப்போது முதலீட்டாளர்கள் நம்
நாட்டிற்கு வருகிறார்கள். வீதிகளை நிர்மாணிக்க உலக வங்கி அரை பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியது. எனவே, அவர்கள் இந்த நாட்டின்
மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையை குழப்புவதற்காக எதிர்க்கட்சிகள் கதைகளை கட்டிவிடுகின்றன என்றார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர,குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட
பலரும் கலந்து கொண்டார்கள்.

ஊடகப்பிரிவு,
நெடுஞ்சாலை அமைச்சு

You might also like

Leave A Reply

Your email address will not be published.