அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் – பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள்!! (வீடியோ படங்கள்)

இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்த வொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இன்றையதினம் முனை கடற்தொழிலாளர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறான அறிவித்தல்களை விடுத்திருந்தனர்.
அத்தோடு அரசியல் கட்சிகள் மீறி தமது இடத்திற்கு வரும் பட்ச்சத்தில் மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள் என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமின்றி தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால் தாங்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி தங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”