;
Athirady Tamil News

வளர்ப்பு நாய் சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்..!!

0

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 43). காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சவேணி (38). இவர்களுக்கு தமிழ்செல்வன் (22) என்ற மகனும், கல்பனா தேவி (18) என்ற மகளும் உள்ளனர்.

குமரேசனுக்கு சிறு வயதில் இருந்தே செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். இவரது வீட்டில் நாட்டு நாய், பொமேரியன், கோம்பை, லேபர் டாக், சித்திபாறை என 10-க்கும் மேற்பட்ட பல்வேறு நாய்கள் உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் சுற்றிய பெண் நாயை அரவணைத்து அதற்கு சில்க் சுமிதா என பெயரிட்டு வளர்த்து வந்தனர். சமீபத்தில் இந்த நாய் கருவுற்றதையடுத்து தனது வீட்டில் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி உறவினர்கள் அனைவரையும் வரவழைத்து சில்க் சுமிதாவுக்கு பிடித்த எலுமிச்சை, புளி, தயிர், பொங்கல், கேசரி சாதம் என 5 விதமான உணவுகளை வழங்கினர்.

மேலும் புதிய ஆடை, மாலை அணிவித்து வளையல்கள் மாட்டி முகத்தில் சந்தனம், குங்குமம் வைத்து வளைகாப்பு நடத்தினர். இது குறித்து குமரேசன் தெரிவிக்கையில், நான் சிறு வயது முதலே நாய்களை வளர்த்து வருகிறேன்.

இதனை செல்லப் பிராணிகள் என்று சொல்வதை விட என் வீட்டில் உள்ள உறவு போலவே பாவித்து வருகிறேன். நாங்கள் என்ன உணவு சாப்பிடுவோமோ அதனையே அவைகளுக்கு பகிர்ந்து கொடுப்போம். நன்றி மறவாத இனம் என்றால் அது நாய்கள்தான். எனவே கருவுற்ற சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு நடத்தினோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*