;
Athirady Tamil News

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய 8 கிலோ எடையுள்ள மீன்..!!

0

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். மீனவர்கள் வலையில் அதிக அளவிலான மீன்கள் கிடைப்பது வழக்கம். ஜேடர்பாளையம் படுகை அணை அருகே அண்ணா பூங்கா உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக படுகை அணை பூங்கா பூட்டப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக ஜேடர் பாளையம் தடுப்பணை பூங்கா திறக்கப்பட்டு, குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சுற்றுலா பயணிகளுக்கு அங்கேயே வறுத்தும், பொறித்தும் விற்பனை செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் வறுத்த மீன்களை சுடச்சுட விரும்பி சாப்பிடுகின்றனர்.

நேற்று படுகை அணை பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 45) என்ற மீனவர் வலையை இழுத்தபோது வலை கடினமாக இருந்துள்ளது. இதனால் அருகில் உள்ள மீனவர்களை அழைத்து வலையை இழுத்துள்ளார்.

அப்போது அந்த வலையில் 8 கிலோ எடை உள்ள மீன் சிக்கி இருந்தது. இதையடுத்து மற்ற மீனவர்களின் உதவியுடன் மேலே கொண்டு வந்தனர். 8 கிலோ எடையுள்ள மீனை அக்கம் பக்கத்தினர் பார்த்து சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 1 =

*