வெள்ளக்காடான சாலை- பெங்களூரு விமான நிலையத்திற்கு டிராக்டரில் சென்ற பயணிகள்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
நேற்று விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கியதால். சிறிய வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். கார்கள் செல்ல முடியாததால் டிராக்டர் மூலம் லக்கேஜ்களுடன் விமான நிலையத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதேபோல் மழையால் விமான சேவையும் தாமதம் ஆனது.