;
Athirady Tamil News

கொழும்பில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து தோட்டாக்கள் மீட்பு!!

0

கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 205 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ரி56 ரக துப்பாக்கியின் 176 தோட்டாக்களும், 9 மில்லி மீற்றர் தோட்டாக்கள் 29 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டிடத்தில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரே குறித்த தோட்டாக்களை முதலில் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 16 =

*