;
Athirady Tamil News

சர்வதேச பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு 101வது இடம்- மத்திய அரசு அதிருப்தி…!!

0

சர்வதேச பட்டினி பட்டியலை அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைடு மற்றும் ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர்ஹில்ப் அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

இந்த பட்டியலில் 116 நாடுகளின் பட்டினி நிலவரம் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினியால் வாடும் மக்கள் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நடப்பாண்டுக்கான பட்டியலில் இந்தியா 101-வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

என்ன சோகம் என்றால், கடந்த ஆண்டை விட (94-வது இடம்) இந்த ஆண்டு இந்தியா பட்டியலில் பின்தங்கி இருக்கிறது. அதிலும் வங்காளதேசம்(76-வது இடம்), பாகிஸ்தான்(92-வது இடம்), நேபாளத்தை (76-வது இடம்) விட இந்தியாவின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

* இந்த அறிக்கை அடிப்படை யதார்த்தம், உண்மைகள் இல்லாதது. எந்த முறையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதில் சிக்கல் இருக்கிறது.

* உலகளாவிய பட்டினி அறிக்கையை தயாரித்துள்ள கன்சர்ன் வேர்ல்ட்வைடு மற்றும் வெல்ட் ஹங்கர்ஹில்ப் அமைப்புகள் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக தங்கள் விடா முயற்சியை சரியாக செய்யவில்லை.

* இந்த அமைப்புகளின் அறிக்கை அறிவியல் சார்ந்ததாக இல்லை. அறிவியலுக்கு அப்பாலான நடைமுறையை பின்பற்றி உள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவீட்டுக்கு உயரம் மற்றும் எடையை கணக்கிட வேண்டும்.

* இந்த அறிக்கை, கொரோனா காலத்தில் மக்கள் உணவு பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்ததை கணக்கில் கொள்ளவில்லை. முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 10 =

*