;
Athirady Tamil News

இன்று இதுவரை 578 பேருக்கு கொவிட் 19 உறுதி!!

0

நாட்டில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி இன்று இதுவரை 578 பேருக்கு கோவிட்19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 531,648 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 492,621 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,484 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 11 =

*