;
Athirady Tamil News

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ‘எங்கட புத்தகங்கள்’ நடத்தும் புத்தகக் கண்காட்சி விற்பனை.!!

0

‘எங்கட புத்தகங்கள்’ 2020 ஜனவரி முதல் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனைசெய்து வருகிறது. கடந்த ஆண்டு வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சுன்னாகம் பொது நூலகத்தோடு இணைந்து முன்னெடுத்த ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களின் கண்காட்சி விற்பனை கொரோனா சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு அமைய ஒன்பது தினங்களுக்கு நடைபெற்றிருந்தது.

இவ்வாண்டு யாழ் பொதுசன நூலகத்தில் எதிர்வரும் 22, 23, மற்றும் 24ஆம் திகதிகளில் இந்தக் புத்தகக் கண்காட்சி விற்பனை இடம்பெற உள்ளது.
யாழ்மாநகரசபையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்தக் கண்காட்சி, தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.

முந்நூறுக்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் அமைந்த புத்தகங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சஞ்சிகைகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி விற்பனைசெய்யப்பட உள்ளது.

ஈழத்தில் வாழும் எழுத்தாளர்களது புத்தகங்கள் மட்டுமன்றி புலத்தில் வாழும் பல ஈழத்து எழுத்தாளர்களினது புத்தகங்களும் இங்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளது.

அனைத்து புத்தகங்களுக்கும் 10% விலைக்கழிவும் தெரிவுசெய்யப்பட்ட புத்தகங்களுக்கு மேலதிக விலைக்கழிவும் வழங்கப்பட உள்ளது.

நூலகங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான ஈழத்துப் புத்தகங்களை ஓரிடத்தில் வாங்கிகொள்ளமுடியும்.

வாசகர்களும் எழுத்தாளர்களும் சந்தித்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பையும் இந்த கண்காட்சி விற்பனை ஏற்படுத்திக்கொடுக்கும் என நம்புகிறோம்.

தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யவிரும்பும் ஈழத்து எழுத்தாளர்கள் எம்மோடு தொடர்புகொண்டால், அவர்களது புத்தகங்களையும் காட்சிப்படுத்தி விற்பனைசெய்ய ஒழுங்குசெய்யமுடியும்.

இந்தக் கண்காட்சி விற்பனையை சிறப்புற நடத்திமுடிக்க அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.

நன்றி.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 2 =

*