;
Athirady Tamil News

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34வது நினைவு தினம்!! (வீடியோ, படங்கள்)

0

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

1987ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த தாதியர் உட்பட 21பேர் இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் 34 ம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவ படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளர், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.