வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!! (படங்கள்)
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று (21.10) காலை முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தில் இன்று (21.10) முதல் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 18, 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன
இதனைத் தொடர்ந்து ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”