;
Athirady Tamil News

வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது!! (வீடியோ)

0

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் நேற்றைய தினம் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு மீனவர்களும் , வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழு ஆய்வாளர் ஊடாக வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இருவரையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.