;
Athirady Tamil News

சீன கப்பலை திருப்பி அனுப்பியது அரசாங்கம்!!

0

சீன நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரங்களை ஏற்றிய கப்பலை கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிக்க வேண்டாம் என்று அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துறைமுகத்திற்குள் கப்பலை நுழைய வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதற்கான காரணம் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கப்பல் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், இன்னும் கொழும்பு துறைமுக எல்லையை அடையவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கப்பலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேதன உரத் தொகுதியை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் மறுத்ததன் காரணமாக முன்னர் திருப்பி அனுப்பப்பட்டதுடன், மீண்டும் அந்தக் கப்பல் இலங்கைக்குத் திரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.