கேரளாவில் மேலும் 8,538 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 8,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 71 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 11,366 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,909 லிருந்து 8,538 ஆக குறைந்துள்ளது.