யாழ்ப்பாண பொலிஸாரினால் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி முன்னெடுப்பு!! (படங்கள்)
யாழ்ப்பாண நகரில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் துவிச்சக்கர வண்டியில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் முகமாக இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக ஒளியூட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் வேலை திட்டம் இன்றைய தினத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பான பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகேயின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த திட்டமானது யாழ் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிசார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”