காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகும் – பிபின் ராவத்துக்கு மெகபூபா கண்டனம்…!!

கவுகாத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முப்படை தளபதி பிபின் ராவத், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தால் காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத்தின் இந்த அறிவிப்புக்கு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், காஷ்மீரை திறந்தவெளி சிறையாக மாற்றிய பிறகும், இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற பிபின் ராவத்தின் அறிவிப்பில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் காஷ்மீரில் நிலைமையை சமாளிக்க இந்திய அரசின் ஒரே வழி அடக்குமுறைதான் என பதிவிட்டுள்ளார்.