;
Athirady Tamil News

நாகவிகாரையை இல்லாதொழிக்கவே ஆரிய குளம் சீரமைப்புத் திட்டம் – விமலதேரர்!!

0

நாகவிகாரையை இல்லாதொழிக்கவே ஆரிய குளம் சீரமைப்புத் திட்டத்தை யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் ஆரம் பித்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி விமலதேரர் , உடனடியாக இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கடும் தொனியில் யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வருக் குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என நம்பகரமாக அறியமுடிவதாக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் மாநகர சபையால் , ஆரிய குளத்தின் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் இந் தக் குளம் சீரமைப்புச் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்திருந்தார் .

அதன்பின்னர் , அந்தக் குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க வேண்டும் என்று ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி கடிதம் மூலம் யாழ்ப்பா ணம் மாநகர சபை முதல்வரிடம் கோரி யிருந்தார் என்று தகவல் வெளியாகி சர்ச்சையாகியிருந்தது .

அது தொடர்பாக விளக்கமளித்த யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் , விகாராதிபதி கடிதம் அனுப்பிருந்தார் என்றும் . ஆனால் யாழ்ப்பாணம் மாநகர சபை அது தொடர்பாக எந்த உறுதி மொழியையும் வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார் .

இந்தநிலையிலேயே , மீண்டும் விகாராதிபதியால் கடும் தொனியில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது என்று அறிய முடிந்தது .

யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பௌத்த ஆலயத்தை இல்லாதொ ழிக்க முயற்சிக்கிறார் என்று விகாரா திபதி அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டி யுள்ளார் என்றும் தெரிகின்றது .

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து மது அருந்துவதற்கும் , கஞ்சா புகைப்பதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்று கூறியுள்ள விகாராதிபதி , பௌத்த கோயிலின் புனிதத் தன்மையைப் பாதிக்கும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார் .

விகாரையில் திருவிழாக் காலங்களுக்கு வரும் பக்தர்கள் , தமது வாகனங்களை ஆரியகுளத்தின் அருகேதான் நிறுத்துவார்கள் என்றும் , ஆரியகுளத் தைப் புனரமைத்து இருக்கைகளை அமைத்தால் அவ்வாறு பக்தர்களுக்கான வாகனத் தரிப்பிடம் இல்லாமற் போவதால் , விகாரைக்கு நெருக்கடி ஏற்படும் எனவும், இதன்மூலம் விகா ரையை இல்லாதொழிக்க யாழ். மாநகர முதல்வர் முற்படுகிறார் என்றும் அந்தக் கடிதத்தில் நாக விகாராதிபதி கடும் தொனியில் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது .

இதேவேளை முன்னைய விகாராதிபதி யின் உடலை தகனம் செய்ய முயன்ற போது அதற்கு தடையுத்தரவு வாங்க முதல்வர் மணிவண்ணன் எடுத்த முயற்சிகளையும் இந்தக் கடிதத்தில் சாடியுள்ள விகாராதிபதி , இப்போது விகாரையின் இருப்புக்கே நெருக்கடியைக் கொண்டுவர முற்படுகின்றார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார் .

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளபோதும் , கடிதம் குறித்த மாநகர சபைக்கு போய்ச் சேர்ந்ததா ? என்பது தொடர்பில் யாழ்ப்பா ணம் மாநகர சபை வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை. என குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

ஆரியகுளம் துரித அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு !! (படங்கள், வீடியோ )

யாழ்.ஆரியகுளம் இப்படி மாற போகிறதா ? (வீடியோ )

You might also like

Leave A Reply

Your email address will not be published.