யாழ்.மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம்!!

யாழ்.மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்டத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.நிசாந்தன் தெரிவித்தார்.
ஏனைய மாவட்டங்களில் இந்தியாவின் நனோ நைட்ரஜன் உரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்திற்கான உர வழங்கல் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் 11 ஆயிரத்து 260 ஹெக்ரேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் ஒரு ஹெக்ரேயர் நிலத்துக்கு 3 லீற்றர் அளவு உர திரவம் தேவைப்படுகிறது
எனினும் இன்றைய தினம் ஒரு பாரவூர்தி திரவம் மாத்திரமே யாழ்ப்பாண மாவட்ட விவசாய மக்களுக்கு வழங்க கொண்டுவரப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட நெற் செய்கையாளருக்கு சுமார் 33 ஆயிரம் லீற்றர் திரவ உரம் தேவைப்பாடுள்ள நிலையில் முதற்கட்டமாக ஒரு பகுதி திரவ உரத்தை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோருக்கு கட்டங்கட்டமாக உரத்தினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்..
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”