;
Athirady Tamil News

வாளுடன் பயணித்த 3 இளைஞர்கள் கைது!!

0

வாள்வெட்டு நடத்தும் நோக்கில் வாள்களுடன் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த தெல்லிப்பழை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் . இந்தச் சம்பவம், நேற்றுமுன்தினம்(24) இரவு இடம்பெற்றுள்ளது .

மல்லாகத்தில் அவர்களைச் சோதனையிட்டபோதே, மோட்டார் சைக்கிளில் வாளை மறைத்தவாறு பயணித்தமை தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

18, 20, 21 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது . கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர்கள் , நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று தெல்லிப்பழைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 6 =

*