மேலும் 300 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 300 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504,003 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 536,645 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 13,640 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.