;
Athirady Tamil News

மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.!!

0

யாழ்ப்பாணம் மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கும் சீருடையை வடிவமைத்துப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பயங்காரவாத விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் அலுவலகத்துக்கு இன்று முற்பகல் 10.30 மணிக்கு சமுகமளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரத்தினை தூய்மையான நகரமாகப் பேணுவதற்காக மாநகர சபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த ஏப்ரல் மாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.

எனினும் உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சை எழுந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சீருடையை வடிவமைத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ்.மாநகர சீருடை அணிந்த ஐவரும் நாலாம் மாடிக்கு அழைப்பு!!

மேயர் மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக ரிஐடியால் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்!!

யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் திடீர் கைது.. (நேரடி வீடியோ)

யாழ்.மாநகர சபையின் காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு அறிவுத்திய பொலிஸார்!!

யாழ்.மாநகர காவல்படை; மணிவண்ணன், பார்த்திபன் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பு!!

வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் மணிவண்ணிடம் தீவிர விசாரணை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*