;
Athirady Tamil News

கல்லூரி மாணவி தற்கொலை: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு…!!!!

0

பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளையைச் சேர்ந்தவர் ஆதிரா (வயது 19),

இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த 22-ந்தேதி ஆதிரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஆதிராவின் செல்போன் மற்றும் லேப்டாப்பை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆதிரா தற்கொலைக்கு முன்பு கை நரம்புகளை அறுத்து இருப்பதும் தெரிய வந்தது. அதை வீடியோவாக பதிவு செய்து வாலிபர் ஒருவருக்கு அனுப்பி இருந்தார்.

அந்த வாலிபரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் பதுங்கி இருந்த திருச்சூரையைச் சேர்ந்த நிகில்குமார் (30) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிகில்குமாரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஆதிராவை காதலித்து வந்தது தெரிய வந்தது.

கடந்த சில மாதங்களாக ஆதிரா வெள்ளறடை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகி வந்ததாகவும், இதனால் ஆத்திரத்தில் ஆதிராவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறினார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நிகில்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் வெள்ளறடை பகுதியைச் சேர்ந்த வாலிபரையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.