;
Athirady Tamil News

மதுரையில் இன்று 1400 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது..!

0

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் 7-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது.

மதுரை புறநகரில் 900 இடங்களிலும், மாநகரில் 500 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன.

வாக்குச்சாவடி மையங்கள், அரசினர் மருத்துவமனை, நகர்ப்புற-கிராம ஆரம்ப சுகாதார மருத்துவமனை உள்பட 1400 இடங்களில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் இருபாலரும் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

மதுரையில் சாரல் மழை பெய்த போதும், பொதுமக்கள் கியூ வரிசையில் நின்று ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை அதிகாரி செந்தில்குமார் கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுவரை 6 கட்ட சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. மதுரை மாவட்டத்தில் இதுவரை 20 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.