மன்னார் சென்ற ரிஷாட்டிற்கு அமோக வரவேற்பு!!

மன்னார் மாவட்டத்திற்கு இன்று (30) மாலை விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை அவரின் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
கடந்த 6 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களை மாவட்டம் தோறும் சென்று சந்தித்து வந்த நிலையில் இன்று (30) மாலை 4.30 மணியளவில் மன்னாரிற்கு விஜயம் செய்தார்.
மன்னார் தாராபுரம் பகுதியில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை கண்ணீர் மல்க வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து வருகை தந்த பல நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது வயோதிபர்கள், தாய்மார்கள் அவரை வரவேற்று சுகம் விசாரித்ததோடு, அவரின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, தான் சிறையில் இருந்த போது, தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.