;
Athirady Tamil News

இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி

0

உத்தர பிரதேசம், கோவா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜக கட்சிகள் நேருக்கு நேர் மோதிய மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும், மத்தியில் பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் தவிக்கிறது.

இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியும் இந்த களத்தில் குதித்துள்ளது. கோவாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவா சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரசும், பா.ஜ.க.வும் ஊழல் கட்சிகள். அதனால் தான் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேச காங்கிரஸ் அஞ்சுகிறது. பா.ஜ.க. குறித்து பேசினால் சிறைக்குச் செல்ல நேரிடும் என காங்கிரசுக்கும் தெரியும். கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க. ஆட்சியில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல் மந்திரிகள் மீதோ, அமைச்சர்கள் மீதோ ஏன் ஒரு வழக்கு கூட இல்லை என தெரிகிறதா?

இரு கட்சிகளும் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றன. இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஒப்பந்தமிட்டுள்ளன.

கோவாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களை அயோத்திக்கும், கிறிஸ்தவர்களை வேளாங்கண்ணிக்கும், முஸ்லிம்களை அஜ்மீர் ஷெரீப்புக்கும், சாய்பாபாவை வணங்குபவர்களை ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும் யாத்திரை செல்ல இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.