;
Athirady Tamil News

இடைப்பாதைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய, பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றுக்கு வாகன நெரிசலின்றி வசதியாகச் செல்லக் கூடிய வகையில் 100,000 கிலோமீற்றர் நீளமான சகல உள்ளக, கிராமப்புற மற்றும் இடைப்பாதைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 1,500 வீதிகள் ´சுபீட்சத்தின் வீதிப் புரட்சி. பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள் ´ எனும் தொனிப்பொருளின் கீழ் ஒரே நாளில் மக்களிடம் கையளிக்கும் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் 2021-11-06 ஆம் திகதி சனிக்கிழமை வீரகெட்டிய மைதானத்தில் இடம்பெறும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கி இந்த 1500 வீதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வீதிகள் அனைத்தும் 3 மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.

நாட்டில் கொடிய கொவிட் தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் அவ்வப்போது நாட்டை முடக்கிய போதிலும், நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 1500 வீதிகளை 3 மாத காலத்தினுள் நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.