;
Athirady Tamil News

நல்லூரில் உள்ள ராஜதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை.!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்களிடம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் எடுத்துரைத்தார்.

இன்று (06.11.2021) காலை இடம்பெற்ற கள விஜயத்தின்போது, இவ்விடயங்கள் அவரால் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டன.

இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளை கொண்ட யாழ்ப்பாண மாவட்டமானது, ஏராளமான தொன்மங்களை கொண்டுள்ளது. அவற்றை பாதுகாப்பது எமது மூதாதையருக்கும், அடுத்துவரும் சந்ததிக்கும் நாம் செய்யும் கடமை என இதன்போது அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.