;
Athirady Tamil News

ஓய்வூதியர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

0

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதலாம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் ´அக்ரஹார´ காப்புறுதியின் கீழ் சலுகைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 2016 ஜனவரி 1ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெறும் அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் சலுகைகள் வழங்கப்படுவதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

70 வயதுக்குட்பட்ட ஓய்வூதியர்களுக்கு மாதத் தவணையாக ரூ.400 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.600 மாதத் தவணையாக வசூலித்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளின் காப்புறுதித் தொகை ஓய்வூதியத் திணைக்களத்தால் சேகரிக்கப்பட்டு தேசிய காப்புறுதி அறக்கட்டளை நிதிக்கு மாதந்தோறும் மாற்றப்படும்.

அனைத்து அரச மற்றும் மாகாண அரச சேவைக்கு உரிய அனைத்து ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும் இந்த காப்பீட்டு திட்டத்தின் பலன்கள், வாழ்நாள் முழுவதும் ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கும் நிலையில், அவர்களின் மனைவி, மற்ற குழந்தைகள் அல்லது ஊனமுற்ற குழந்தைகளுக்கு இந்த சலுகைகள் கிடைக்கப்பெறாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாக இருப்பினும் இதன் பங்களிப்பாளர்களாக மாறுவதற்கு இணங்காதவர்கள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியத் திணைக்களத்திற்கோ அல்லது பிரதேச செயலக ஓய்வூதியப் பிரிவினருக்கோ அறிவிக்குமாறு ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.