;
Athirady Tamil News

FRESH DATES!! (மருத்துவம்)

0

கறுப்பு, சிவப்பு நிறத்தில் மேலே சுருக்கங்களுடன் பேரீச்சம் பழங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் ஃப்ரஷ்ஷான பேரீச்சம் பழங்களைப் பார்த்தால் சற்று வியப்பு ஏற்படுவது இயல்புதான்.

தற்போது ஆங்காங்கே தள்ளு வண்டிகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் Fresh dates அதிகம் விற்கப்படுகிறது. வழக்கமாக நாம் சாப்பிடும் உலர்ந்த பேரீச்சம்பழத்தில் கிடைக்கும் சத்துக்களுக்கும், Fresh Dates-க்கும் இடையே வேறுபாடுகள் ஏதேனும் உள்ளதா?

* செடியிலிருந்து புதிதாகப் பறிக்கும் பேரீச்சம்பழம் மஞ்சள் அல்லது வெளிர் சிவப்பு நிறத்திலும், மிகக் கடினமானதாகவும் இருக்கும். மிகவும் ஈரப்பதமான தட்ப வெப்பநிலைகளில் பேரீச்சை பழம் பயிரிடப்படுவதால், அவற்றில் சாறு நிறைந்து இருக்கும். இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, அவற்றின் ஃப்ரஷ்னஸ் குறையாமல் நீண்ட காலம் பாதுகாக்க சாற்றைக் குறைத்தும், மிருதுவாக்கவும் காய வைத்தும் பதப்படுத்துவார்கள். அப்படி பதப்படுத்தும்போது நீர் வற்றி, தோல் சுருங்கி மற்றும் பழுப்பு நிறமாக மாறிவிடும். இதுவே நாளடைவில், பழுப்பு நிற, தோல் சுருங்கிய பேரீச்சையாக நமக்கு பழகிவிட்டது.

* கலோரிகளைப் பொறுத்தவரை உலர்ந்த பேரீச்சையின் கலோரி அளவு, Fresh dates-ஸை விட கணிசமான அளவில் அதிகமாக இருக்கும். எனவே, எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஃப்ரெஷ் டேட்ஸினை எடுத்துக் கொள்ளலாம்.

* மஞ்சள் பேரீச்சம் பழத்திலும், உலர் பேரீச்சையைப் போலவே அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. குறைந்த ஈரப்பதத்துடனிருக்கும் உலர்ந்த பேரீச்சையில் புதிய பேரீச்சம்பழத்தைவிட, ஊட்டச்சத்துக்களின் மதிப்பு அதிகமாக இருக்கும்.

* வளரும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிக்குப் பதிலாக Fresh dates கொடுத்தால் எலும்புகளுக்கும் பலம் கிடைக்கும். அதே வேளையில் மூளை ஆற்றலையும் அதிகரிக்கும்.

* மாதவிடாய் நிற்கும் தருவாயில் உள்ள பெண்களுக்கு கால்சியம் சத்து அதிகம் தேவைப்படும். இவர்களும் Fresh dates சாப்பிடலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.