;
Athirady Tamil News

‘ஜாம்’ வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா- சமாஜ்வாடி கட்சி…!!

0

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என யோகி ஆதித்யநாத் களம் இறங்கியுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி பக்க பலமாக உள்ளார்.

அதேவேளையில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் தினத்தன்று, அகிலேஷ் யாதவ், முகமது அலி ஜின்னாவை பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்திய தலைவர்களான காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் தலைவர்களோடு இணைத்து ஜின்னாவை புகழ்ந்ததாக அகிலேஷ் யாதவ் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.

தற்போது பா.ஜனதா கட்சி இதை கையில் எடுத்துள்ளது. எங்கு சென்றாலும் அகிலேஷ் யாதவ் ஜின்னா குறித்து பேசியதை விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்கிறது.

நேற்று அசாம்காரில் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அமித் ஷா சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் JAM அல்லது யோகி ஆதித்யநாத்தின் JAM ஆகிய இரண்டில் எதை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தார்.

மேலும், அகிலேஷ் யாதவ் சொல்லும் JAM: M (முகமது அலி ஜின்னா), A- அசாம் கான் (சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்), M- (முக்தார்- ஜெயில் மாஃபியா கும்பல் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. முக்தார் அன்சாரி) என அமித் ஷா விளக்கம் அளித்தார்.

அத்துடன், யோகி ஆதித்ய நாத்தின் JAM- J (ஜன் தன் வங்கி கணக்கு), A (ஆதார் கார்டு), M (Mobile- ஊழலை வேரோடு அழிக்க ஒவ்வொருவருக்கும் செல்போன்) என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையல் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் பா.ஜனதா JAM-க்கு விளக்கம் அளித்துள்ளார்.

பா.ஜனதா JAM-ல் J (jhooth) பொய், A (ahankaar)- ஆணவம் M (mehengai)- பணவீக்கம் என்பதுதான். தனது சொந்த ஜாம் மீது பா.ஜனதா பதில் அளிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.