;
Athirady Tamil News

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாம்!! (படங்கள், வீடியோ)

0

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும் இந்த நீரிழிவு சிகிச்சை முகாமினை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து நீரிழிவு சிகிச்சை முகாமில் பொதுமக்கள் நீரிழிவு பரிசோதனையினை மேற்கொண்டிருந்தனர்.

நிகழ்வில் யாழ் நீரிழிவு கழகத்தின் தலைவர் தி.மைக்கல், செயலாளர் க.கணபதி மற்றும் நீரிழிவு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.