;
Athirady Tamil News

வவுனியா நகரில் சுகாதார பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு : பலர் முகக்கவசமின்றிய நிலையில்!! (படங்கள்)

0

நாட்டில் மீண்டும் கோவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகரில் இன்று (16.11.2021) காலை 10.00 மணி தொடக்கம் 12.30 மணி வரை திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியர் அரங்கன் மற்றும் பிரசன்னா தலமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் , பொலிஸார் , இரானுவத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நகரில் பல்வேறு பகுதிகளில் மூன்று குழுக்காக பிரிந்து திடீர் சோதனை நடவடிக்கை .இடம்பெற்றிருந்து.

குறிப்பாக நகரில் ஹோரவப்போத்தானை வீதி , பஜார் வீதி , தர்மலிங்கம் வீதி , சந்தை சுற்றுவட்ட வீதி ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முகக்கவசமின்றி , சமூக இடைவெளியின்றி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் என பலர் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இனி வருகின்ற நாட்களில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான சோதனை நடவடிக்கையின் போது கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுவர்களுக்கு எதிராக எவ்வித சந்தர்ப்பமும் வழங்காது உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.