;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன்!!

0

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது என தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் பயணங்கள் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார .

அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ் மாவட்டத்தில் இன்றுவரை 469 மரணம் பதிவாகியுள்ளது தற்பேதைய சுழலில் 634 குடும்பங்கள் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா அதிகரித்து செல்கிறது. பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கவேண்டும்.

சமூக இடைவெளி முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்

தற்போதைய சுழலில் தளர்வு நிலை அறிவிக்கப்பட்டுள்ள போதும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது அதனை கட்டாயம் பின்பற்றபடவேண்டும் .

அவ்வாறு செய்வதன்மூலமே யாழ்ப்பாணத்தில் கொரோனாவை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தலாம். முகக்கவசம் இடைவெளி போன்ற விடயங்களில் கட்டாயம் பின்பற்ற பட வேண்டும். இது மட்டுமன்றி பயணங்கள் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.

எவ்வளவு தூரம் ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டுடன் இருப்போமோ அத்தகைய அளவிற்கு நாமும் எமது சமுதாயத்தை பாதுகாத்து கொள்ளலாம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.