;
Athirady Tamil News

இலங்கையில் மற்றுமொரு டெல்டா பிறழ்வு!!

0

இலங்கையில் மற்றுமொரு டெல்டா இணை பிறழ்வு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

தற்போது நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பிறழ்வு B1.617.2.28 ஆகவும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இணை பிறழ்வு B.1.617.2.104 ஆகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா திரிபின் இரண்டு இணை பிறழ்வுகள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.