;
Athirady Tamil News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,488 பேருக்கு கொரோனா…!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,488 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,329 பேர் குணமடைந்துள்ள நிலையில் 313 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,45,10,413 ஆக உள்ள நிலையில், 3,39,22,037 பேர் குணமடைந்துள்ளனர். 4,65,662 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் 1,22,714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 532 நாட்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையாகம். மொத்த பாதிப்பில் இது 1 சதவீதத்திற்கும் குறைவாகும். தற்போது 0.36 சதவீதம் ஆகும். இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு குறைவானதாகும்.

கோப்புப்படம்

தினசரி பாதிப்பு சதவீதம் 2 சதவீதத்திற்கு கீழ் கடந்த 48 நாட்களாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 0.98 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் 1,16,50,55,210 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.