;
Athirady Tamil News

வவுனியாவில் கடும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! (படங்கள்)

0

வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று மாலையில் இருந்து வவுனியாவில் மழை பெய்து வருவதுடன் இன்று அதிகாலை முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.

இதன்காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைவடைந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளுக்கு மாணவர் வரவும் மிகவும் குறைவாக காணப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.