;
Athirady Tamil News

க்ரிப்டோகரன்சி தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனுமதி!!

0

டிஜிட்டல் வங்கி முறைமை, ப்லொக்செயின் (Block chain) தொழிநுட்பம் மற்றும் க்ரிப்ரோகரன்சி (Crypto Currency) தொடர்பான கம்பனிகளுக்கு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக விதிக்கக்கூடிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக 2021 ஒக்ரோபர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுஜீவ முதலிகேவின் தலைமையில் 08 உறுப்பினர்களுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் இறுதி அறிக்கையினை 2022 யூன் மாதம் 30 ஆம் திகதி ஆகும் போது சமர்ப்பிப்பதற்கும், குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக குறித்த துறைகளில் செயலாற்றும் தொழிநுட்ப வல்லுநர்கள் இருவரை உறுப்பினர்களாக நியமிப்பதற்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் யோசனை தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.