;
Athirady Tamil News

இன்று 742 பேருக்கு கொவிட்!!

0

நாட்டில் மேலும் 210 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இன்று 742 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 562,210 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,305 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 529,662 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.