;
Athirady Tamil News

‘நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ – வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!!

0

காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே போன்ற பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டது.

போராட்டம் இடம்பெற்ற அப்பகுதியில் பொலிசாரும், இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

காணி அளவீடுகளின்போது அரச அதிகாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை – வடக்கு ஆளுநர்!!

மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.!! (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.